நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு

ரகுல் பிரீத் சிங்

நடிகை ராகுல் பிரீத் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  நடிகை ரகுல் ப்ரீத் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  தமிழ் ,ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.தமிழில் அடிக்கடி படங்கள் நடிக்காவிட்டாலும் நடிக்கும் ஒரு சில படங்களில் ரசிகர்களின் மனதை வென்று விடுவார்.2019 ஆம் ஆண்டு வெளிவந்த என்.ஜி.கே படத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.   
  View this post on Instagram

   

  A post shared by Rakul Singh (@rakulpreet)


  இந்நிலையில் தனக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.அதில்’எனக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. நான் தற்பொது தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். நான் நன்றாக ஓய்வெடுத்து விரைவில் படப்பிடிப்பில் பங்கேற்பேன். என்னை சந்தித்த அனைவரும் கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொள்ளும் படி கேட்டுகொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: