ஊரடங்கு முடியும் வரை 200 ஏழைக் குடும்பங்களுக்கு உணவளிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங்

 • Share this:
  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் உணவுக்காக கஷ்டப்படும் 200 ஏழைக் குடும்பங்களுக்கு உணவளித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

  உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் 21-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

  இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் அன்றாடம் வேலைகளுக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருபவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தொண்டு நிறுவனங்கள் தொடங்கி பலரும் பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

  இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங், குர்கானில் உள்ள தனது வீட்டின் அருகே இருக்கும் 200 ஏழைக்குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார். அவருடைய குடும்பத்தினர் ஏழைகளுக்கு உணவு தயாரித்து விநியோகம் செய்கின்றனர். ஊரடங்கு முடியும் வரை இந்த உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் முடிவெடுத்துள்ளார்.

  இதுகுறித்து ரகுல் ப்ரீத் சிங் கூறுகையில், நெருக்கடியான காலத்தின் போது சமூகத்திற்கு நாம் திருப்பித் தர வேண்டிய நேரமிது. நமக்கு கிடைத்துள்ள அனைத்து சலுகைகளுக்கான நன்றியைத் தெரிவிக்க சரியான தருணம் இதுதான் என்கிறார்.

  தமிழில் கடைசியாக என்ஜிகே படத்தில் சூர்யாவுடன் நடித்திருந்த ரகுல் ப்ரீத் சிங், சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்திலும், கமல்ஹாசன் உடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

  மேலும் படிக்க: விஜய் சேதுபதிக்காக எழுதிய கதை எப்படி இருக்கும் - சேரன் விளக்கம்!  Published by:Sheik Hanifah
  First published: