நடிகர் ராணா உடன் காதலா..? மனம் திறக்கும் கோலிவுட் நடிகை

ராணா

நடிகர் ராணா உடன் ரகுல் ப்ரீத் அடிக்கடி தென்படுவதாகவும் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் பரவின.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகர் ராணா உடன் காதல் என்ற செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

கோலிவுட் முதல் பாலிவுட் வரையில் முன்னனி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். நடிகர் ராணா உடன் ரகுல் ப்ரீத் அடிக்கடி தென்படுவதாகவும் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் பரவின.

ஆனால், சமீபத்தில் தனியார் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இதற்கு விளக்கமளித்துள்ளார் ரகுல். அவர் கூறுகையில், “நானும் ராணாவும் நல்ல நண்பர்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள். நான் திரைத்துறையில் நுழைந்தது முதல் ராணா எனக்கு நல்ல நண்பர். தற்போதைய சூழலில் நான் என் வேலையில் பிஸி ஆக இருக்கிறேன். குறிப்பாக நான் சிங்கிள்” எனக் கூறியுள்ளார்.

நடிகர் ராணா மற்றும் ரகுல் ப்ரீத் சிங்


நடிகை ரகுல் நடிப்பில் வருகிற நவம்பர் 22-ம் தேதி மர்ஜவான் என்ற பாலிவுட் திரைப்படம் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா, ரித்தேஷ் தேஷ்முக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அடுத்ததாக அர்ஜுன் கபூர் ஜோடியாக மற்றொரு பாலிவுட் திரைப்படத்திலும் ரகுல் நடித்து வருகிறார்.

ரகுல் தமிழில் யுவன், தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன், தேவ், என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் SK 14, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Published by:Rahini M
First published: