முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பிக் பாஸில் பிரியங்காவை வெளியேற்ற முடிவு செய்த ராஜூ.. புரமோவில் அதிர்ச்சி!

பிக் பாஸில் பிரியங்காவை வெளியேற்ற முடிவு செய்த ராஜூ.. புரமோவில் அதிர்ச்சி!

பிரியங்காவின் பெயரை சொல்லி அவரின் உருவ படத்தில் சாயத்தை பூசுகிறார் ராஜு.

பிரியங்காவின் பெயரை சொல்லி அவரின் உருவ படத்தில் சாயத்தை பூசுகிறார் ராஜு.

பிரியங்காவின் பெயரை சொல்லி அவரின் உருவ படத்தில் சாயத்தை பூசுகிறார் ராஜு.

  • Last Updated :

    பிக் பாஸில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் புரமோவில் ராஜூ மற்றும் பிரியங்கா ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ் சீசன் 5 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. TTF டாஸ்க் தற்போது வேகமெடுத்துள்ளது. மற்ற சீசன்களை போல் அல்லாமல் இந்த முறை டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் சற்று வித்யாசமாக கையாளப்படுகிறது. அதாவது ஒவ்வொரு நாள் நடக்கும் ஒவ்வொரு போட்டியில் இருந்தும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். போட்டியில் இருந்து வெளியேறியவர்கள் அடுத்த கட்டத்திற்கு நுழைய முடியாது. இதனால் பிக் பாஸ் போட்டியாளர்கள் நீ, நான் என சண்டை போட்டுக் கொண்டு டாஸ்குகளை விளையாடி வருகின்றனர்.

    இதையும் படிங்க.. வெளியானது குக் வித் கோமாளி 3 புரமோ.. ரசிகர்கள் தேடிய அந்த கோமாளி மட்டும் மிஸ்ஸிங்!

    நேற்றைய எபிசோடில் முட்டை டாஸ்க்கில் பிரியங்கா - தாமரைக்கும் இடையில் வாய் சண்டை போய், கை சண்டை வரை நீண்டது. அந்த போட்டியில் முட்டைகளை பாதுகாத்துக் கொண்டு பிரியங்கா, அமீர், ராஜூ, சிபி, சஞ்சீவ் அடுத்த கட்டத்திற்கு சென்றனர். இன்று மூன்றாவது நாளுக்கான டாஸ்க் வைக்கப்படுகிறது. கலர் சாயத்தை பூசும் டாஸ்க். பிக் பாஸ் ஒவ்வொரு கேள்வியாக கேட்க, அந்த கேள்விக்கான பதில் உடைய நபரின் மீது சாயத்தை அடிக்க வேண்டும். யார் மீது அதிகம் சாயம் பூசப்பட்டுகிறதோ அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவர் என அறிவிக்கப்படுகிறது.

    இதையும் படிங்க.. மரணத்திற்கு பிறகும் ரசிகர்கள் மத்தியில் வாழும் விஜே சித்ரா!

    கார்டன் ஏரியாவில் இந்த டாஸ்க் தொடங்க, ஒன்னும் இல்லாத விஷயத்தை பலூன் போல் ஊதி பெருசாக்குபவர் யார்? என்ற கேள்வியை பிக் பாஸ் கேட்கிறார். அதற்கு சற்றும் தயங்காமல் பிரியங்காவின் பெயரை சொல்லி அவரின் உருவ படத்தில் சாயத்தை பூசுகிறார் ராஜு. இதனால் பிரியங்கா முகம் மாறுகிறது. அதே கேள்விக்கு ராஜூவின் பெயரை சொல்லி அவர் மீது சாயத்தை பூடுகிறார் பிரியங்கா.

    ' isDesktop="true" id="651399" youtubeid="-kZQFgP03r4" category="entertainment">

    பிக் பாஸ் வீட்டில் மிகவும் புரிதல் உள்ள நண்பர்கள் என்றால் அது ராஜூ பிரியங்கா தான். இவர்களின் காம்போவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. எல்லா நேரத்திலும் பிரியங்காவுக்காக ராஜூ நின்று இருக்கிறார். இந்நிலையில் இப்போது டிக்கெட் ஃபூ ஃபினாலே டாஸ்கில் ராஜூவும், பிரியங்காவும் மாறி மாறி போட்டி போட்டு கொள்வது அவர்களின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. அதே சமயம் இது கேம் என்பதால் இருவரும் விட்டு கொடுக்காமல் ஆடுவது பார்க்க சுவாரசியமாக இருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

    top videos

      உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

      First published: