ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

நல்லவனுக்கு நல்லவன்... கெட்டவனுக்கு கெட்டவன்... தர்பார் ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் பஞ்ச்!

நல்லவனுக்கு நல்லவன்... கெட்டவனுக்கு கெட்டவன்... தர்பார் ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் பஞ்ச்!

ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் தர்பார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் தர்பார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நான் நல்லவனா இருக்கணுமா, கெட்டவனா இருக்கணுமா இல்ல மோசமானவனா இருக்கணுமா.. நீங்களே முடிவு பண்ணுங்க" என்ற வசனமும் ஆங்கிலத்தில் கிறுக்கலாக எழுதப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

ரஜினியின் தர்பார் படத்தின் கதையை விளக்கும் வகையிலே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளது.

பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் 167-வது படம் தர்பார். இப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை 8.30 மணிக்கு வெளியிட்டுள்ளது, பட தயாரிப்பு நிறுவனமான லைகா.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினி போலீஸ் கெட்டப்பில் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன. அப்போது ரஜினி இந்தப் படத்தில் போலீசாக நடிக்கிறார் என்று பேசப்பட்டது.

Also read... சூப்பர் ஸ்டார் ரஜினியின் 167-வது படம் தர்பார்: வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

167-வது படமான தார்பார் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இன்று வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்  அவருக்குப் பின்னே இரண்டு துப்பாக்கிகள், ஒரு கைவிலங்கு, போலீஸ் நாய் ஒன்றும் உள்ளது. போலீஸ் பெல்ட், தொப்பி, தோளில் மாட்டும் பேட்ஜ் போன்றவைகளும் உள்ளன.

இதன் மூலம் ரஜினி இந்தப் படத்தில் போலீசாக நடிக்கிறார் என்று படக்குழு உறுதி செய்துள்ளது.

மேலும் அந்த போஸ்டரில், நான் நல்லவனா இருக்கணுமா, கெட்டவனா இருக்கணுமா இல்ல மோசமானவனா இருக்கணுமா... நீங்களே முடிவு பண்ணுங்க" என்ற வசனமும் ஆங்கிலத்தில் கிறுக்கலாக எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஜினி நல்லவனுக்கு நல்லவனாகவும், கெட்டவனுக்கு கெட்டவனாகவும் படத்தில் மாறுவார் எனத் தெரிகிறது.

Also see...


சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Anirudh, AR Murugadoss, Nayanthara, Rajnikanth