ஆயத்தப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன: ரஜினிகாந்த் விரைவில் கட்சித் தொடங்குவார் - ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்

ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்து இருக்கின்றோம். அதற்கான ஆயத்த பணிகளை முடித்து இருக்கின்றோம். ரஜினிகாந்தை விமர்சிப்பவர்கள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை என ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ஜே.ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஆயத்தப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன: ரஜினிகாந்த் விரைவில் கட்சித் தொடங்குவார் - ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்
நடிகர் ரஜினிகாந்த்
  • News18
  • Last Updated: October 27, 2020, 10:28 PM IST
  • Share this:
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் டாக்டர்.ஜெயகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளையொட்டி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் டாக்டர் ஜெ.ஜெயகிருஷ்ணன் தலைமையில் அயர்லாந்து வாழ் ரஜினி மக்கள் மன்றத் தலைவர் சாகுல் அமீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திற்க்கு சுமார் 2,000 மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காஞ்சி, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர் டாக்டர் ஜே.ஜெயகிருஷ்ணன் மரக்கன்றுகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார். காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 9 நகரம் 13 ஒன்றிய நிர்வாகிகள் மரக்கன்றுகளை பெற்றுக்கொண்டனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜே.ஜெயகிருஷ்ணன், காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து வருகின்றோம்.

Also read... ’போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி’ - இலங்கை கச்சேரியில் பாடுவது குறித்து எஸ்.பி.பி என்னிடம் கேட்டார் - சீமான்சிட்லபாக்கம் ஏரி, பெரும்பாக்கம் ஏரி போன்ற ஏரிகளை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தூர்வாரி இருக்கின்றோம்.மழைக்காலம் தொடங்கி உள்ளதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 2,000 மரக்கன்றுகளை நட உள்ளோம். இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருவோம்.

ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்து இருக்கின்றோம். அதற்கான ஆயத்த பணிகளை முடித்து இருக்கின்றோம். ரஜினிகாந்தை விமர்சிப்பவர்கள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை என மாவட்டச் செயலாளர் ஜே.ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார்.
First published: October 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading