இயக்குநராக அறிமுகமாகும் ராஜ்கிரண் மகன்!

இயக்குநராக அறிமுகமாகும் ராஜ்கிரண் மகன்!

மகனுடன் ராஜ்கிரண்

”‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். ”

 • Share this:
  நடிகர் ராஜ்கிரணின் மகன் விரைவில் இயக்குநராகப் போவதாக அவர் தன் முகநூலில் தெரிவித்துள்ளார்.

  தயாரிப்பாளராக அறிமுகமான ராஜ்கிரண் ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவானார். தற்போது வரை தமிழ் சினிமாவின் வெற்றிகரமான நடிகராக வலம் வருகிறார். தற்போது அவரது மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்குநராக அறிமுகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

  இறை அருளால்,

  இன்று, என் மகனார்
  திப்பு சுல்தான் நைனார் முஹம்மது
  அவர்களின் இருபதாவது
  பிறந்த நாள்...

  "என் ராசாவின் மனசிலே...

  Posted by Raj Kiran Raj on Sunday, 31 January 2021


  இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள ராஜ்கிரண், “இறை அருளால், இன்று என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள். ‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: