சர்வம் தாளமயம் படத்தின் டீசர் வெளியீடு - (வீடியோ)

சர்வம் தாளமயம் டீசர்

Rajiv Menon's Sarvam Thaalamayam Teaser Released | ‘சர்வம் தாளமயம்’ படத்தின் டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. #Arrahaman

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்வம் தாளமயம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்வம் தாளமயம்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் ஜி.வி பிரகாஷ் உடன் அபர்ணா பாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வரும் டிசம்பர் 28-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், சர்வம் தாளமயம் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.வித்தியாசமான கதை களத்தில் நடித்திருக்கும் ஜி.வி. பிராஷ்-க்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ‘சர்வம் தாளமயம்’ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பலரது பாராட்டுகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க...

Published by:Murugesan L
First published: