தெலுங்கில் அறிமுகமாகும் கர்ணன் பட நாயகி...!

ரஜிஷா விஜயன்

கொரோனா பாதிப்பு குறைந்து லாக்டவுன் விலக்கிக் கொள்ளப்பட்டதும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கர்ணன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரஜிஷா விஜயன். அவருக்கு தெலுங்கின் முன்னணி நடிகரின் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மலையாளத்தில் அனுராக கருக்கின் வெள்ளம் படத்தின் மூலம் 2016 இல் அறிமுகமானவர் ரஜிஷா விஜயன். முதல் படத்திலேயே கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருது அவருக்கு கிடைத்தது. ஜுன், ஸ்டேன்ட் அப் போன்ற படங்கள் ரஜிஷாவை முன்னணி நடிகையாக்கியது. கர்ணன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் இரு நாயகிகளில் ஒருவராக ரஜிஷா நடிக்கிறார். அத்துடன் சூர்யா கௌரவ வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத படத்திலும் முக்கிய வேடமேற்றுள்ளார். இந்நிலையில் தெலுங்கிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Also read... ஐஎம்டிபி தளத்தில் முதலிடம் - த்ரிஷ்யம் 2 மேலுமொரு சாதனை!
 தெலுங்கின் மாஸ் மகாராஜா ரவிதேஜா நடிக்கும் புதிய படத்தில் இரு நாயகிகளில் ஒருவராக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். இது அவரது முதல் தெலுங்கு வாய்ப்பு. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை சரத் மன்தவா இயக்குகிறார். படத்துக்கு இசையமைப்பது தமிழரான சாம் சிஎஸ்.


கொரோனா பாதிப்பு குறைந்து லாக்டவுன் விலக்கிக் கொள்ளப்பட்டதும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: