ரஜினி நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பேட்ட படத்திற்கு பிறகு அனிரூத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 9-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.
படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளதாகவும் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
#Darbar 1st schedule successfully completed 🎥 🔥🔥 2nd schedule from May 29th 🌟 #ThalaivarinDarbar @rajinikanth @ARMurugadoss #Nayanthara @santoshsivan @anirudhofficial
— Lyca Productions (@LycaProductions) May 15, 2019
Also watch
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Yogibabu, Anirudh, AR Murugadoss, Darbar, Nayanthara, Rajinikanth