ஜப்பானில் ரஜினியின் தர்பாருக்கு டிமாண்ட் - காட்சிகள் அதிகரிப்பு...!

தர்பார்

படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பானின் கியோட்டோ, நகோயா, நிகிட்டா ஆகிய பகுதிகளில் தர்பார் கூடுதலாக திரையிடப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்த மாதம் 16 ஆம் தேதி ரஜினியின் தர்பார் ஜப்பானில் வெளியானது. ஒரு வாரம் கழிந்த நிலையில், ரசிகர்களின் டிமாண்டின் காரணமாக காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று ரஜினியை தவிர்த்து யாரை வேண்டுமானலும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் ஜப்பானின் ஒரே இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே. முத்து படத்தில் தொடங்கிய பந்தம் இது. அந்தப் படத்தில் ரஜினியின் நடனத்தையும், ஸ்டைலையும் பார்த்து அவருக்கு ரசிகர்களான ஜப்பானியர்கள் தொடர்ந்து ரஜினியின் படங்களைப் பார்த்து வருகின்றனர். தாமதமானாலும் ரஜினியின் படங்கள் ஜப்பானில் வெளியாகாமல் இருப்பதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஜினியை பார்க்க ஜப்பானிலிருந்து அவரது ரசிகர்கள் சென்னை வருவது கடந்த காலங்களில் நாம் பார்த்த அதிசய நிகழ்வு. தர்பார் வெளியான போது ஜப்பானிலிருந்து படத்தைப் பார்ப்பதற்காகவே ஒரு ரசிகர் சென்னை வந்தார். இந்த மாதம் 16 ஆம் தேதி தர்பார் ஜப்பானில் வெளியானதை ரஜினியின் ஜப்பானிய ரசிகர்கள் கொண்டாடினர்

Also read... எதற்கும் துணிந்தவன் தேர்ட் லுக்கை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்...!

படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பானின் கியோட்டோ, நகோயா, நிகிட்டா ஆகிய பகுதிகளில் தர்பார் கூடுதலாக திரையிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு படமொன்றுக்கு, வெளியான ஒரு வாரம் கழித்து திரையரங்குகளை அதிகரிப்பது அசாத்தியம். அதனை ரஜினி சாதித்திருக்கிறார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: