நாளை காலை 9 மணிக்கு வெளியாகிறது ரஜினியின் 2.0 டீசர்!

news18
Updated: September 12, 2018, 5:45 PM IST
நாளை காலை 9 மணிக்கு வெளியாகிறது ரஜினியின் 2.0 டீசர்!
2.0 பட போஸ்டர்
news18
Updated: September 12, 2018, 5:45 PM IST
ரஜினிகாந்தின் 2.O பட டீசர் நாளை காலை வெளியாகிறது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்‌ஷய்குமாரும், ஹீரோயினாக எமி ஜாக்‌ஷனும் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படம் முழுவதும் 3டி கேமிரா தொழில்நுட்பத்தில் படம் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள். 2.0 படத்தின் டிரெய்லரை தணிக்கை செய்யும்போது பார்த்த ஒருவர் பாகுபலியை மிஞ்சுவதாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

75 மில்லியன் டாலர் செலவில் உருவான இந்தப் படம் நவம்பர் 29-ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த 2.0 டீசர் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்