• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • `2.0 ட்ரெய்லர்' : ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

`2.0 ட்ரெய்லர்' : ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

2.0 பட போஸ்டர்

2.0 பட போஸ்டர்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 2.o படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 2.0 படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.

    நடிகர் ரஜினிகாந்த் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் 3-வது படமாக 2.0 உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் எமி ஜாக்‌ஷன் மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

    3டி தொழில்நுட்பத்தில் நேரடியாக எடுக்கப்பட்ட படம் என்பதால் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 3-ம் தேதி வெளியாகும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். முன்னதாக நவம்பர் மாதம் 29-ம் தேதி, படம் திரைக்கு வரும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: