நண்பர் விவேக் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் - ரஜினிகாந்த்

நண்பர் விவேக் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் - ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நண்பர் விவேக் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நகைச்சுவை விவேக் இன்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்ததால், சென்னை வடபழனியிலுள்ள சிம்ஸ் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேக்கின் உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. 24 மணி நேரம் கழித்தே உறுதியாக தெரிவிக்கமுடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. நேற்று கொரோனா தடுப்பு மருந்து போட்ட விவேக் இன்று உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் தடுப்பூசிதான் காரணம் என்று வதந்தி பரவியது.

  இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘விவேக்குக்கு ஏற்பட்ட மாரடைப்புக்கும் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்று விளக்கமளித்தார். இந்தநிலையில், விவேக் விரைவில் குணமடைய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துவருகின்றனர்.

  விவேக் உடல்நிலை குறித்து ரஜினிகாந்த் ட்விட்டர் பதிவில், ‘நண்பர்
  விவேக் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: