''ரசிகர்களின் சந்தோஷமே எனது சந்தோஷம்'' பேட்ட ஹிட் குறித்து ரஜினிகாந்த் கருத்து

Petta | பேட்ட திரைப்படத்தின் வெற்றியு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜையே சேரும் என்று ரஜினிகாந்த் கூறினார்.

news18
Updated: January 11, 2019, 10:21 AM IST
''ரசிகர்களின் சந்தோஷமே எனது சந்தோஷம்'' பேட்ட ஹிட் குறித்து ரஜினிகாந்த் கருத்து
பேட்ட - ரஜினிகாந்த்
news18
Updated: January 11, 2019, 10:21 AM IST
பேட்ட திரைப்படம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருப்பதால் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ‘காளி’ என்ற கதாபாத்திரத்திலும் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி ‘ஜித்து’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

Petta Movie - Rajinikanth, பேட்ட - ரஜினிகாந்த்
பேட்ட - ரஜினிகாந்த்


அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகியிருக்கும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். படத்தின் ஓப்பனிங் காட்சியில் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” என்ற வசனத்தை நடிகர் ரஜினி கூறும் போது தொடங்குகிறது அவரின் மாஸ் பேட்ட.

பேட்ட படத்தில் ரஜினி


“ஒரு நல்லாட்சி எப்படி இருக்குமோ அப்படி தான் இனிமே இந்த ஹாஸ்டல் இருக்கும். புதுசா வருபவர்களை ஏற்கெனவே இருக்குவங்க தொறத்துற அரசியல் இங்கு இருந்து தான் தொடங்குது. நான் நல்லவன் தான். ரொம்ப நல்லவன் கிடையாது. ” என்ற அரசியல் வசனங்களும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன.
Loading...
பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த்


இவ்வளவு நாட்களாக ரஜினியின் ரசிகர்கள் எந்த ஸ்டைலை பார்த்து அவரை ரசித்தார்களோ அந்த அத்தனை காட்சிகளையும் ஒரே படத்தில் வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். படத்தினை ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, பேட்ட திரைப்படம் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருப்பதால் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பேட்ட திரைப்படத்தின் பெருமை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜையே சேரும் என்றும் கூறினார்.

Also see...

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...