• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இலங்கை குண்டுவெடிப்பு: ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை - ரஜினிகாந்த்

இலங்கை குண்டுவெடிப்பு: ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை - ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

மதியம் 2 மணி அளவில், இலங்கையின் டெகிவாலா உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏழாவதாக குண்டு வெடித்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறன. இந்நிலையில் இலங்கையில் நட்சத்திர ஹோட்டல், தேவாலயங்கள் உள்ளிட்ட 6 இடங்களில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் 160 பேர் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியிள்ளது. பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதியம் 2 மணி அளவில், இலங்கையின் டெகிவாலா உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏழாவதாக குண்டு வெடித்தது.

    இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 3 மணி அளவில் கொழும்பு தெமடகொட பகுதியில் இலங்கை வீட்டு வசதி வாரியம் அமைந்துள்ள பகுதியில் குண்டு வெடித்தது. இந்த தொடர் குண்டு வெடிப்புகள் நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.



    இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த்,  “ஈஸ்டர் திருநாளான இன்று இலங்கையில் நடந்த இந்த துயரத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை” என்று  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.



    கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில்,

    “உலகின் உன்னதமான பொருள் உயிர்தான்.
    அதை அழிப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை.
    இலங்கையின் உயிர் பறிப்பு
    மனித உரிமைக்கு மாறானாது.
    கண்ணீரோடு கண்டிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.



    வீடியோ பார்க்க: இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு...! என்ன நடக்கிறது?



    இலங்கையில் தேவாலயங்கள் உட்பட 6 இடங்களில் குண்டு வெடிப்பு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: