• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சென்னையில் ஆட்டோவில் பயணித்த ரஜினிகாந்த்!

சென்னையில் ஆட்டோவில் பயணித்த ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

  • News18
  • Last Updated :
  • Share this:
ரஜினிகாந்த் சென்னையில் இன்று ஆட்டோவில் பயணித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை திரைத்துறையில் இருக்கும் பலரும் எளிமையானவர் என்று புகழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதேபோல் அவர் தனது இமயமலை பயணத்தின் போது சாதாரண கடையில் உணவு உண்பது, தரையில் ஓய்வெடுப்பது போன்ற புகைப்படங்களும் இணையத்தை சுற்றி வருகின்றன. இந்நிலையில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீடு வரை நடிகர் ரஜினிகாந்த் ஆட்டோவில் பயணித்துள்ளார்.

பேட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவர், இன்று காலை தனது மகள் ஐஸ்வர்யா வீட்டிற்கு புறப்பட்டார். ஆனால் கார் ஓட்டுனர் வராத காரணத்தால் ஆட்டோவை அழைத்து வரச் சொல்லி, அதில் ஏறி ஆழ்வார்பேட்டையில் உள்ள தனுஷ் இல்லத்திற்குச் சென்றார். அங்கு அவர்களைச் சந்தித்த பின்னர் கார் மூலமாக மீண்டும் தனது போயஸ் இல்லத்திற்கு ரஜினிகாந்த் வந்து சேர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: