ரஜினியை முதல்வராக்க வேண்டும்- 45 ஆண்டுகளுக்கு முன்பு முதல் ரசிகர் மன்ற தொடங்கிய ரசிகர் கோவிலில் உறுதிமொழி ஏற்பு

ரஜினிகாந்த் முதல்வராக வேண்டும் என உறுதிமொழி ஏற்றுக்கொண்ட முதல் ரசிகர்.

ரஜினியை முதலமைச்சர் ஆக்குவதற்கு அவரின் முதல் ரசிகர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.

  • Share this:
நெடுங்காலமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது விவாதப் பொருளாக இருந்து வந்த நிலையில், சமீபத்தில் அவரது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் 45 ஆண்டுகளுக்கு முன்பாகவே முதன்முதலில்  ரஜினிகாந்திற்கு ரசிகர் மன்றம் தொடங்கிய வரன மதுரைமுத்து, ரஜினிகாந்த் முதலமைச்சர் அரியணையில் அமர வைக்க கோவிலில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

உறுதிமொழி ஏற்ற ரசிகர்கள்.
உறுதிமொழி ஏற்ற ரசிகர்கள்.


நாளை நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து ரஜினிகாந்தின் பிறந்த நாளைக் கொண்டாடி வரும் மதுரைமுத்து, இந்த ஆண்டு ரஜினியை தமிழக முதல்வராக்க வேண்டும் என மதுரை விநாயகர் கோயிலில் உறுதிமொழி ஏற்றார். இவரைத் தொடர்ந்து ரஜினி ரசிகர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: