தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : ரஜினிகாந்துக்கு 2-வது முறையாக சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : ரஜினிகாந்துக்கு 2-வது முறையாக சம்மன்

ரஜினிகாந்த்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

  • Share this:
கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 13 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் இதுவரை 18 கட்ட விசாரணை நடத்தியுள்ளது.

தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்து விட்டதால்தான் வன்முறை வெடித்தது. அதனால்தான் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும் கலவரத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் யார் என எனக்கு தெரியும் எனவும் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்திருந்தார்.

இதனடிப்படையில் ரஜினிக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்தோ, தான் தூத்துக்குடிக்கு வந்தால் ரசிகர்கள் கூடுவார்கள்; அதனால் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகும். எனவே நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

மேலும் படிக்க: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய கல்யாண சுந்தரம் அதிமுகவில் இணைகிறார்

இதையடுத்து விசாரணை ஆணையத்தில் ஆஜரான ரஜினியின் வழக்கறிஞர் இளம்பாரதி ரஜினியின் கோரிக்கை குறித்து ஆணையத்திடம் விளக்கினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி அருணா ஜெகதீசன், ரஜினியிடன் கேட்க இருந்த கேள்விகளை எழுத்துப்பூர்வமாக வழக்கறிஞர் இளம்பாரதியிடம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது 2-வது முறையாக ஜனவரி 19-ம் தேதி ரஜினிகாந்த் தூத்துக்குடியில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்..
Published by:Sheik Hanifah
First published: