ரஜினிகாந்த் உயிருக்கு பயந்தவரல்ல... பின்னணியில் வேறு சில அழுத்தம் உள்ளது - பிரபல இயக்குநர்

ரஜினிகாந்த் உயிருக்கு பயந்தவரல்ல... பின்னணியில் வேறு சில அழுத்தம் உள்ளது - பிரபல இயக்குநர்

ரஜினிகாந்த்

அரசியலுக்கு வரவில்லை என ரஜினிகாந்த் கூறியிருப்பதன் பின்னணியில் வேறு சில அழுத்தம் இருப்பதாக இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார்.

  • Share this:
ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா என்பது குறித்து நீண்ட காலமாக எதிர்பார்ப்பு இருந்துவந்த நிலையில், வரும் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவேன். அதற்கான தேதியை டிசம்பர் 31-ம் தேதி அறிவிப்பேன் என்று சமீபத்தில் தெரிவித்தார். அதனையடுத்து, அவர் கட்சி தொடங்குவது உறுதியானது.

இந்தநிலையில், ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்புக்காக பங்கேற்றிருந்தபோது, உடன் பணியாற்றிய நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனால், ரஜினிகாந்த்க்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றபோதிலும், அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தற்போது நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். மன்னியுங்கள்’ என்று அறிவித்து கட்சி தொடர்பான விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

ரஜினியின் இந்த முடிவு குறித்து அரசியல் கட்சியினர் தொடங்கி திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் திரைப்பட இயக்குநர் பிரவீன் காந்தி, “உயிருக்கு பயந்தவரல்ல ரஜினிகாந்த். அரசியலுக்கு வரவில்லை அவர் கூறியிருப்பதன் பின்னணியில் வேறு சில அழுத்தங்கள் உள்ளன. உயிரே போனாலும் பரவாயில்லை சொன்ன அவர் அரசியலுக்கு வரப் போவதில்லை என தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமே” என்று கூறியுள்ளார்.

ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரவீன் காந்தி தீவிர ரஜினி ரசிகரும் கூட. டிவி நிகழ்ச்சிகள் நடத்திய அரசியல் விவாத மேடைகளிலும் ரஜினிக்கு ஆதரவாக பிரவீன் காந்தி பேசி வந்ததும் குறிப்பிடத்தக்கது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: