ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு திடீர் ரத்து?

ரஜினிகாந்த் | சிவா
- News18 Tamil
- Last Updated: March 6, 2020, 1:56 PM IST
ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ திரைப்படம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தர்பார் படத்துக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து பிண்ணனியில் குடும்ப கதைக்களத்தை மையப்படுத்தி உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.
அடுத்தகட்ட படப்பிடிப்பை கொல்கத்தா மற்றும் புனேயில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக இத்திட்டத்தை அண்ணாத்த படக்குழு கைவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வட இந்தியாவில் நடத்த திட்டமிட்டிருந்த ஷுட்டிங்கை ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலேயே செட் அமைத்து படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து கொரோனோ வைரஸ் அச்சத்தின் காரணமாக பல்வேறு தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, நடிகர் சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இத்திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க: கொரோனா அச்சத்தால் மலேசியாவில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்த இளையராஜா...!
தர்பார் படத்துக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கிராமத்து பிண்ணனியில் குடும்ப கதைக்களத்தை மையப்படுத்தி உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.
அடுத்தகட்ட படப்பிடிப்பை கொல்கத்தா மற்றும் புனேயில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக இத்திட்டத்தை அண்ணாத்த படக்குழு கைவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.