முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பரியேறும் பெருமாளை பாராட்டிய ரஜினி... நெகிழ்ந்த பா.ரஞ்சித்!

பரியேறும் பெருமாளை பாராட்டிய ரஜினி... நெகிழ்ந்த பா.ரஞ்சித்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

  • 1-MIN READ
  • Last Updated :

பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தயாரித்த படம் பரியேறும் பெருமாள். நடிகர் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்தப் படத்தை ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் கொண்டாடி வருகின்றனர். மேலும், இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பரியேறும் பெருமாள் படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், தயாரிப்பாளர் பா.இரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜை அழைத்துப் பாராட்டியுள்ளார். “ஒரு நாவலைப் போல படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். பல இடங்களில் நான் சிலிர்த்துவிட்டேன். மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. ஓர் அதிர்வை ஏற்படுத்திவிட்டீர்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு நீலம் புரொடெக்சன்ஸ் சார்பாக இயக்குநர் பா.இரஞ்சித், ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ளார். பரியேறும் பெருமாள் குறித்த ரஜினியின் சமூக அக்கறையும், கனிவு நிறைந்த அன்பும், உணர்ச்சி மிகுந்த பாராட்டும் பெரும் உற்சாகத்தைத் தருவதாக இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இயக்குநர் ஷங்கர் பரியேறும் பெருமாள் படம் குறித்த தனது ட்விட்டர் பதிவில், “பரியேறும் பெருமாள் சினிமாவில் ஓர் இலக்கியம் போல அமைந்துள்ளது. ஆழமாக பாதிக்கும்படி இருந்தது. யோசிக்க வைத்தது. படத்தில் இடம்பெற்றுள்ள அந்தக் கொலைகாரர் கதாபாத்திரம் பயங்கரமாக இருந்தது. ஜோ கதாபாத்திரம் தேவையான இடங்களில் மென்மையாக, மிகச் சிறப்பாக இருந்தது. இயக்குநர் மாரி செல்வராஜின் மிகச்சிறந்த படைப்பு” என்று கூறியுள்ளார்.

அதே போல் நடிகர் சிவகார்த்திகேயன், “இந்த அழகான திரைப்படம் எப்போதும் நமது மனதில் இடம்பிடிக்கும். அனைவருமே தங்களது அற்புதமான பங்களிப்பினை சிறப்பாகச் செய்துள்ளனர். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

First published:

Tags: Mari selvaraj, Pa. ranjith, Pariyerum perumal, Rajinikanth