நீங்க எடுத்த முடிவு 100% சரி... ரஜினி அறிக்கைக்கு லாரன்ஸ் ரியாக்‌ஷன்

நீங்க எடுத்த முடிவு 100% சரி... ரஜினி அறிக்கைக்கு லாரன்ஸ் ரியாக்‌ஷன்

ரஜினிகாந்த் உடன் ராகவா லாரன்ஸ்

ரஜினிகாந்த் எடுத்த முடிவை லாரன்ஸ் வரவேற்றிருக்கிறார்.

  • Share this:
ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவேன் என்று டிசம்பர் 3-ம் தேதி அறிவித்த ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ பட ஷூட்டிங்குக்கு ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பில் இருந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து ரஜினிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் தொற்று இல்லை என்பது உறுதியானது.

இருந்தாலும் அவரது ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் ரஜினிகாந்த். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழு, “ஒரு வாரம் முழு ஓய்வில் இருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குறைந்தபட்ச உடற் செயல்பாடு மற்றும் மனஅழுத்தத்தை தவிர்க்கவேண்டும்.
இந்தச் செயல்பாடுகளுடன் சேர்த்து கொரோனா பாதிப்பு ஏற்படும் சூழல்களை தவிர்க்கும் நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்” என்று அறிவுறுத்தியது.

இதையடுத்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேம். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ரஜினிகாந்தின் முழு அறிக்கையை படிக்க க்ளிக் செய்யவும்

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். மன்னியுங்கள்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரஜினிகாந்தின் இந்த முடிவு அவரது ரசிகர்கள் சிலருக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் பெரும்பாலானோர் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ், “குருவே நீங்கள் எடுத்த முடிவு 100% சரி. மற்ற அனைத்தையும் விர உங்களின் உடல் நலம் தான் முக்கியம். உங்களை நம்புபவர்கள் மீது அக்கறை கொண்டு சுயநலமில்லாத ஒரு முடிவை எடுத்திருக்கிறீர்கள்.நீங்கள் எப்பொழுதுமே மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துபவர். அதுதான் உங்களை சிறந்தவர் ஆக்கியுள்ளது. உங்களின் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன். குருவே சரணம்” என்று தெரிவித்துள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: