ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

புத்தாண்டு கொண்டாட்டம்.. ரஜினி வீட்டு வாசலில் காத்திருந்த ரசிகர்கள்.. இன்ப அதிர்ச்சி தந்த ரஜினிகாந்த்!

புத்தாண்டு கொண்டாட்டம்.. ரஜினி வீட்டு வாசலில் காத்திருந்த ரசிகர்கள்.. இன்ப அதிர்ச்சி தந்த ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து

ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து

தனது இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆங்கிலப் புத்தாண்டான 2023ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. இதையொட்டி தமிழகம் உள்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. சென்னையின் மெரினா உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி கேக் வெட்டியும், ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறியும் புத்தாண்டை கொண்டாடினர். சமூக வலைதளங்களில் 2022ஆம் ஆண்டின் நினைவுகளை பகிர்ந்து வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

வழக்கமாக பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட தினங்களில் நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு அவரது ரசிகர்கள் அதிகளவில் கூடுவர். சென்னையில் இருந்தால் அவர்களை சந்தித்து வாழ்த்து கூறுவார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரஜினிகாந்த் இல்லம் வாழை மரம் மற்றும் தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை முதலே அப்பகுதியில் ரசிகர்கள் குவிந்தனர். காலை 9 மணியளவில் வீட்டில் முகப்பு பகுதிக்கு வந்த ரஜினிகாந்த், ரசிகர்களைப் பார்த்து கையசைத்து வணக்கம் வைத்தார். பின்னர், ரசிகர்களிடம் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார்.

முன்னதாக நேற்று நள்ளிரவு புத்தாண்டு பிறந்தவுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து செய்தியை நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அத்துடன், உன்வாழ்க்கை உன்கையில் என்ற ஹாஷ் டேக்கையும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: New Year 2023, Rajinikanth, Rajinikanth Fans