ராமகிருஷ்ண மடத்தின் தலைவரிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்

news18
Updated: July 11, 2018, 12:57 PM IST
ராமகிருஷ்ண மடத்தின் தலைவரிடம் ஆசி பெற்ற ரஜினிகாந்த்
ராமகிருஷ்ணர் மடத்தின் தலைவரிடம் ஆசி பெறும் ரஜினிகாந்த்
news18
Updated: July 11, 2018, 12:57 PM IST
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ராமகிருஷ்ணர் மடத்திற்கு சென்ற ரஜினிகாந்த், அந்த மடத்தின் தலைவர் ஸ்மரனாநந்தா மகராஜை சந்தித்து ஆசி பெற்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினியின் புதிய படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் பகுதியல் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 7 -ஆம் தேதி இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ரஜினியுடன் நடிக்கிறார். இவர்களுடன் பாபி சிம்ஹா, யோகி பாபு, மேகா ஆகாஷ் , சனந்த் ரெட்டி ஆகியோரும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக மதுரை மற்றும் இமயமலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே இரண்டு நாட்கள் ஓய்வுக்காக சென்னை திரும்ப ரஜினிகாந்த் முடிவு செய்தார்.

முன்னதாக, பேலூரிலுள்ள ராமகிருஷ்ணர் மடத்திற்கு சென்ற ரஜினிகாந்த் தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, அந்த மடத்தின் தலைவர் ஸ்மரனாநந்தா மகராஜை சந்தித்து ஆசிபெற்றார். பின்னர் விமானம் மூலமாக ரஜினிகாந்த் சென்னை வந்தடைந்தார்.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...