40 ஆண்டுகளாக தன் படத்தை வர்ணித்து கடிதம் எழுதிய மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்த ரஜினி...!

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜானி திரைப்படம் தொடங்கி தர்பார் திரைப்படம் வரை ரஜினியின் திரைப்படங்களின் நடிப்பையும் கதையையும் வர்ணித்து 40 ஆண்டுகளாக கடிதம் மூலம் ரஜினிகாந்திற்கு வாழ்த்து செய்தியை அனுப்பி வந்தவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ஜக்கரியாவை ரஜினி நேரில் சந்தித்தார்.

1979-ம் ஆண்டிலிருந்து ரஜினிகாந்தின் ரசிகராக பயணித்து வரும் இவருக்கு வாய் பேச இயலாது காது கேட்காது. ஆனால் ரஜினியின் நடிப்பை பார்த்து திரையில் வியக்கும் இவர், அவரின் திரைப்படதிற்கு தொடர்ந்து  விமர்சனம் எழுதி வருகிறார்

அதேபோல 1979-ம் ஆண்டிலிருந்து அவர் எழுதும் கடிதத்திற்கு பதில் கடிதத்தை ரஜினிகாந்த் அனுப்பாமல் இருந்ததே கிடையாது. ரஜினிகாந்த் தன் கைப்பட எழுதி உங்கள் கடிதத்தை படித்தேன் என்று பதில் அனுப்பி இருக்கிறார்.தொடர்ந்து கடிதம் எழுதி வரும் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் அவருக்கு அழைப்பு கொடுத்ததின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில் செல்வநாதன் மூலம் தகவல் சொல்லி ஜக்கரியாவை அழைத்து வர கூறியுள்ளார்.

அதனடிப்படையில் இன்று காலை 9 மணியளவில் போயஸ் கார்டன் இல்லத்தில் ஜக்கரியா ரஜினிகாந்த்தை சந்தித்தார்..
அப்பொழுது அவர் எழுதிய கடிதங்களை கையோடு எடுத்து வந்து காண்பித்தார். அப்போது ரஜினிகாந்த் ஜக்கிரியாவை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். அவரை கட்டியணைத்து  சால்வை அணிவித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

 
Published by:Sankar
First published: