இரவில் ரஜினியின் ரத்த அழுத்தத்தை பொறுத்து டிஸ்சார்ஜ் செய்வது பற்றி நாளை முடிவு - அப்போலோ விளக்கம்

இரவில் ரஜினியின் ரத்த அழுத்தத்தை பொறுத்து டிஸ்சார்ஜ் செய்வது பற்றி நாளை முடிவு - அப்போலோ விளக்கம்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. இரவில் அவருடைய ரத்த அழுத்தத்தின் நிலையைக் கருத்திக் கொண்டு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த ' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்தது. அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதேதேரத்தில் ரஜினிகாந்திற்கு தொற்று இல்லை எனவும் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் விளக்கமளித்திருந்தனர். இந்தநிலையில், அவருடைய ரத்த அழுத்தம் சீராக இல்லாத நிலையில் ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

  இந்தநிலையில், ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ரஜினிகாந்த்தின் உடல்நிலை சீராக உள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் முடிவுகள் வந்துள்ளன. அதில், ஆபத்தான அறிகுறிகள் எதுவும் இல்லை. மேலும், சில சோதனைகளின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

  மீதமிருக்கும் ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலும், இன்றைய இரவில் அவருடைய ரத்த அழுத்தத்தின் நிலையைக் கணக்கில் கொண்டும் மருத்துவமனையில் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று நாளை முடிவு செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: