முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு! மகள் திருமணத்துக்கு அழைப்பு

இந்தநிலையில், ரஜினிகாந்த், திரையுலக பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் வேலைகளில் பிஸியாகவுள்ளார்.

news18
Updated: February 10, 2019, 8:27 AM IST
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ரஜினிகாந்த் சந்திப்பு! மகள் திருமணத்துக்கு அழைப்பு
நடிகர் ரஜினிகாந்த்
news18
Updated: February 10, 2019, 8:27 AM IST
சென்னை கிரின்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த ரஜினிகாந்த், அவரது மகள் திருமணத்துக்கான அழைப்பிதழை வழங்கினார்.

ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு வரும் பிப்ரவரி 11-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. அரசியல் பிரமுகரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும் தொழிலதிபருமான விசாகனை திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்தநிலையில், ரஜினிகாந்த், திரையுலக பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகளுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் வேலைகளில் பிஸியாகவுள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் நிச்சயதார்த்தம்


கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சௌந்தர்யா மற்றும் விசாகன் நிச்சயர்தார்த்த விழா நடைபெற்றது. அந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில், இன்று காலையில், சென்னை கிரின்வேஸ் சாலையிலுள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த ரஜினிகாந்த், அவரது மகள் திருமண அழைப்பிதழை வழங்கினார். அழைப்பிதழை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘மகளின் திருமண விழாவிற்கு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: February 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...