ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவு - மருத்துவமனை அறிக்கை

ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவு - மருத்துவமனை அறிக்கை

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நலம் விரும்பிகள் யாரும் அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ரஜினிகாந்த் உடல் நிலை தற்போது முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், ரத்த அழுத்தம் சீராகும்பட்சத்தில் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்படும் என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் உடல்நிலை சீராகும் வரை ஒய்வெடுக்கும்மாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த ' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதேதேரத்தில் ரஜினிகாந்திற்கு தொற்று இல்லை எனவும் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் விளக்கமளித்திருந்தனர்.

ரஜினிகாந்த்துக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று வந்தது. இந்தநிலையில், ரஜினிகாந்த் ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ரஜினிகாந்த்தை தீவிரமாக கண்காணித்துவருகிறோம். அவருடைய ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கான மருந்துகள் மிகக்கவனமாக கொடுக்கப்படுகிறது. இந்த இரவு முழுவதும் அவர் மருத்துவமனையில் இருப்பார். கூடுதல் சோதனைகள் நாளை மேற்கொள்ளப்படும். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் ஓய்வு எடுத்துக் கொண்டு உள்ளார். அவருடைய நலம் விரும்பிகள் யாரும் அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வரவேண்டாம். அவரது உடல்நலம் கருதி யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று அவருடைய குடும்பத்தினரும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். அவருடைய மகள், அவருடன் இருக்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதை தொடர்ந்து இன்று அவருக்கு மேலும் சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ரஜினிகாந்த ரத்த அழுத்தம் நேற்றை விட தற்போது சீராக உள்ளது. அவருடைய ரத்த அழுத்தத்தை பொறுத்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்.  மேலும் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராகும் வரை ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
Published by:Vijay R
First published: