Home /News /entertainment /

ரஜினிகாந்த்தின் உடல்நிலை சீராக உள்ளது: இரவு முழுவதும் மருத்துவமனையில் இருப்பார் - அப்போலோ விளக்கம்

ரஜினிகாந்த்தின் உடல்நிலை சீராக உள்ளது: இரவு முழுவதும் மருத்துவமனையில் இருப்பார் - அப்போலோ விளக்கம்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்தை தீவிரமாக கண்காணித்துவருகிறோம். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் இன்று இரவு முழுவதும் மருத்துமனையில் இருப்பார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த ' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்தது. அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதேதேரத்தில் ரஜினிகாந்திற்கு தொற்று இல்லை எனவும் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் விளக்கமளித்திருந்தனர்.

    ரஜினிகாந்த்துக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று வந்தது. இந்தநிலையில், ரஜினிகாந்த் ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ரஜினிகாந்த்தை தீவிரமாக கண்காணித்துவருகிறோம். அவருடைய ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கான மருந்துகள் மிகக்கவனமாக கொடுக்கப்படுகிறது. இந்த இரவு முழுவதும் அவர் மருத்துவமனையில் இருப்பார். கூடுதல் சோதனைகள் நாளை மேற்கொள்ளப்படும். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் ஓய்வு எடுத்துக் கொண்டு உள்ளார். அவருடைய நலம் விரும்பிகள் யாரும் அவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வரவேண்டாம். அவரது உடல்நலம் கருதி யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று அவருடைய குடும்பத்தினரும், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர். அவருடைய மகள், அவருடன் இருக்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ரஜினிகாந்த், ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு ரஜினிகாந்த்தின் உடல்நிலைகுறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விசாரித்துள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published:

    Tags: Rajinikanth

    அடுத்த செய்தி