• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அண்ணாத்த... வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த்!

அண்ணாத்த... வெற்றிகரமாக படப்பிடிப்பை முடித்த ரஜினிகாந்த்!

அண்ணாத்த (தமிழ்)

அண்ணாத்த (தமிழ்)

இந்த வார இறுதியில் படத்தின் மொத்த படக்காட்சிகளும் படமாக்கப்பட்டுவிடும் என்கின்றனர். இதனால், திட்டமிட்டபடி நவம்பர் 4 தீபாவளிக்கு அண்ணாத்தயை திரையில் எதிர்பார்க்கலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அண்ணாத்த படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார் ரஜினிகாந்த்.

தர்பார் படத்துக்குப் பிறகு ரஜினி நடித்துவரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். நயன்தாரா ரஜினியின் ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் அவரது தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. குஷ்பு, மீனா, ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். டி.இமான் இசை

நீண்ட நாள்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் அண்ணாத்தயில் குடும்பப் பின்னணி கொண்ட கதையில் நடித்துள்ளார். வீரம், விஸ்வாசம் படங்களில் கூட்டுக்குடும்பப் பின்னணி படத்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது. அதனை மனதில் வைத்து கூட்டுக்குடும்பப் பின்னணியில் அண்ணாத்தயையும் எடுத்துள்ளனர்

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்ட படங்களில் அண்ணாத்தயும் ஒன்று. இருமுறை படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதால் கடைசிமுறை மிகவும் எச்சரிக்கையுடன் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்தினர்.

Also read... மே - 20 ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா நெகடிவ் உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஆந்திராவில் ஊரடங்கு நிலுவையில் இருந்த போதும் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்தது. தற்போது கிடைத்திருக்கும் செய்தி, ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் நேற்றுடன் படமாக்கப்பட்டு விட்டன. நயன்தாராவும் இந்த கடைசி ஷெட்யூல்டில் கலந்து கொண்டது முக்கியமானது.

சென்னையில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சியின் டப்பிங் உடனடியாக தொடங்க உள்ளது. அதனை முடித்த பின் அடுத்த மாதம்  அவர் மருத்துவப் பரிசோதனைக்காக யுஎஸ் செல்லலாம் என்கின்றன செய்திகள்.

இந்த வார இறுதியில் படத்தின் மொத்த படக்காட்சிகளும் படமாக்கப்பட்டுவிடும் என்கின்றனர். இதனால், திட்டமிட்டபடி நவம்பர் 4 தீபாவளிக்கு அண்ணாத்தயை திரையில் எதிர்பார்க்கலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: