Rajinikanth : அண்ணாத்த படப்பிடிப்பிற்காக மேற்கு வங்கம் செல்லும் ரஜினி..

ரஜினிகாந்த்

மேற்கு வங்கத்தில் நடக்கும் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி நாளை கிளம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
    அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, சிவா இயக்கி வருகிறார். ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். கொரோனாவால் பலமுறை படப்பிடிப்பில் தடங்கல் ஏற்பட்டது. கடந்த ஏப்ரலில் ஹைதராபாத்தில் பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தினர். அதனைத் தொடர்ந்து ரஜினி மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார். 

    சில தினங்கள் முன்பு சென்னை திரும்பியவர் தனது மன்ற நிர்வாகிகளை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்தார். தனது பெயரில் இயங்கிவரும் மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, அதை ரசிகர் மன்றமாக மாற்றுவதாகவும், ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் முக்கிய முடிவுகளை அறிவித்தார். நாளை அவர் கிளம்பி மேற்கு வங்கம் செல்கிறார்.

    Rajinikanth return to Chennai today from US trip

    அங்கு நடக்கும் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ரஜினியும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. இந்த இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நான்கு நாள்கள் மட்டுமே நடக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.



    அண்ணாத்த படம் வரும் நவம்பர் 4 தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: