வீடு திரும்பிய ரஜினிகாந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற மனைவி

வீடு திரும்பிய ரஜினிகாந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற மனைவி

ரஜினிகாந்த்

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ரஜினிகாந்தை அவரது மனைவி ஆரத்தி எடுத்து வரவேற்றிருக்கிறார்.

  • Share this:
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த ' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்தது. அதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது .

படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதேதேரத்தில் ரஜினிகாந்திற்கு தொற்று இல்லை எனவும் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் விளக்கமளித்திருந்தனர்.

இந்தநிலையில், அவருடைய ரத்த அழுத்தம் சீராக இல்லாத நிலையில் ஹைதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் இரு டிசம்பர் 25-ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது ரத்த அழுத்தம் சீரானதை அடுத்து நேற்று மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஒருவாரம் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கிய மருத்துவர்கள் குறைந்தபட்சம் உடற்செயல்பாடு மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினர். மேலும் கொரோனா பாதிப்பு ஏற்படும் சூழல்களை தவிர்க்கும் நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு திரும்பிய ரஜினிகாந்தை அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: