ரஜினிகாந்தின் புதிய கெட்-அப்: ரசிகர்களுக்கு கடுமையான கெடுபிடி

news18
Updated: June 13, 2018, 4:41 PM IST
ரஜினிகாந்தின் புதிய கெட்-அப்: ரசிகர்களுக்கு கடுமையான கெடுபிடி
ரஜினிகாந்துடன் கார்த்திக் சுப்புராஜ்
news18
Updated: June 13, 2018, 4:41 PM IST
ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காலா பட ரிலீசைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்காக மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்குக்கு சென்ற படக்குழுவினர் . அங்குள்ள கல்லூரி ஒன்றில் படக்குழுவினர் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்தை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு காலா படம் வெளியான ஜூன் 7-ம் தேதி அன்று தொடங்கியது.

காலா படத்தில் இயல்பான தோற்றத்தில் நடித்த ரஜினிகாந்த் இப்படத்திற்காக தனது கெட்- அப்பை மாற்றியுள்ளார். மேலும் இப்படத்தின் கதையும், ரஜினிகாந்தின் கதாபாத்திரமும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் டார்ஜிலிங்கில் இப்படத்தின் படப்பிடிப்புக்காக துணை நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானோர் திரண்டுள்ளனர். படப்பிடிப்பை காணும் சிலர் அதை தங்களது கைப்பேசியில் படம் பிடித்து இணையத்தில் உலவ விடுவதால் படப்பிடிப்பு நடைபெறும் பகுதி முழுவதும் தனியார் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் செல்போனுக்கும் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்குள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்புக்கான அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

டார்ஜிலிங்கில் 30 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...