நாதுராம் கோட்சே குறித்த கமல்ஹாசனின் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரவக்குறிச்சியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நேற்று கமல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், ’இஸ்லாமியர்கள் அதிகம் பேர் இருக்கும் இடம் என்பதால் சொல்லவில்லை; காந்தி சிலைக்கு முன் சொல்கிறேன்.. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக தெரிவித்தார். சமரச இந்தியா மற்றும் சமமான இந்தியாவுக்கு எதிரான போக்கு காந்தி கொலையிலிருந்தே தொடங்குவதாக கமல் குறிப்பிட்டார்.
கமல்ஹாசனின் இந்த பேச்சு சர்ச்சையாகியுள்ளதோடு பா.ஜ.கவினர் கடும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் பாஜக தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விஷத்தைக் கக்கி வரும் கமல்ஹாசனின் நாக்கை அறுக்கவேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தர்பார் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த், கமல்ஹாசனின் பேச்சு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும் முதற்கட்ட படப்பிடிப்பு நன்றாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இதையும் பாருங்க...
Published by:Sheik Hanifah
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.