‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு நாள் குறித்த ரஜினிகாந்த்

‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு நாள் குறித்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்த ரஜினிகாந்த் ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கும் நாள் குறித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • Share this:
‘தர்பார்’ படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரஜினிகாந்தின் 60% காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் அவரது உடல்நிலை மற்றும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், டிசம்பர் 31-ம் தேதி கட்சி தொடங்க உள்ள தேதியை அறிவிப்பதாகவும், ஜனவரியில் கட்சி உதயமாகும் என்றும் உறுதியளித்தார். மேலும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டியது எனது கடமை என்றும் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிக்குச் செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இயக்குநர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் கடந்த நவம்பர் 27-ம் தேதி உயிரிழந்ததால் டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்புக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து டிசம்பர் 12-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடும் ரஜினிகாந்த், டிசம்பர் 15-ம் தேதி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: தயாரிப்பாளர் சங்க கணக்குகள் தொடர்பாக விளக்கம் அளிக்க விஷாலுக்கு நோட்டீஸ்

ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதால் படப்பிடிப்பு நடைபெற உள்ள ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அதிகம் ரசிகர்கள் கூட்டம் கூடாதவாறும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் அதிக கவனம் செலுத்த படக்குழு முடிவு செய்துள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sheik Hanifah
First published: