ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

90 நாட்கள் ஏ.ஆர்.முருகதாஸுக்கு கால்ஷீட் கொடுத்த ரஜினி... மார்ச்சில் படப்பிடிப்பு?

90 நாட்கள் ஏ.ஆர்.முருகதாஸுக்கு கால்ஷீட் கொடுத்த ரஜினி... மார்ச்சில் படப்பிடிப்பு?

ரஜினிகாந்த்| ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்த்| ஏ.ஆர்.முருகதாஸ்

பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என்பதில் பல்வேறு விதமான தகவல்கள் கோலிவுட் வட்டாரத்திலிருந்து கசிந்துள்ளன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    ரஜினிகாந்தின் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் விஜய்சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்தது. அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

    பேட்ட படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என்பதில் பல்வேறு விதமான தகவல்கள் கோலிவுட் வட்டாரத்திலிருந்து கசிந்தன.

    தற்போது கிடைத்த தகவலின்படி இந்தப் படத்துக்காக நடிகர் ரஜினிகாந்த் 90 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், மார்ச் மாதத்தில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து ஹைதராபாத், மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தற்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ள நடிகர்களைத் தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றுவருவதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை மிக பிரமாண்டமாக உருவாக்க லைகா திட்டமிட்டு வருவதும் கூடுதல் தகவல்.

    தெற்கு ரயில்வே பணியில் புறக்கணிக்கப்படும் தமிழர்கள் - வீடியோ

    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: A.R.murugadoss, Rajinikanth