ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தேர்தலுக்கு முன்பே தொடங்கும் ரஜினி - முருகதாஸ் பட ஷுட்டிங்!

தேர்தலுக்கு முன்பே தொடங்கும் ரஜினி - முருகதாஸ் பட ஷுட்டிங்!

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ்

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்கூட்டியே படப்பிடிப்பு தொடங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படத்தின் ஷுட்டிங் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

  கார்த்திக் சுப்புராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் த்ரிஷா நடித்திருந்தனர். இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இது ரஜினிகாந்தின் 166-வது படம். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், சமூக ஆர்வலராகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தில் மட்டுமே ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பேட்ட படத்தை அடுத்து இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

  இந்தப் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு தெரிவித்திருந்தார். தற்போது வரை படத்தின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த படக்குழு தற்போது படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டது. ஏப்ரல் 10-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்கூட்டியே படப்பிடிப்பு தொடங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

  அஜித்தின் 10-ம் தேதி சென்டிமென்ட்... - ஸ்பெஷல் வீடியோ

  Published by:Sheik Hanifah
  First published:

  Tags: A.R.murugadoss, Rajinikanth