காதல் நாடகமாடி சீரியல் நடிகையை ஏமாற்றியவர் என குற்றம் சாட்டப்பட்டவர் வெளியிட்ட நடிகையின் ஆடியோ... வழக்கில் திடீர் திருப்பம்...(வீடியோ- ஆடியோ)

Youtube Video

சென்னையில் தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி பணம் பறித்ததாக சின்னத்திரை நடிகை ஒருவர் ராஜேஷ் என்பவர் மீது புகார் அளித்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகைதான், தன்னை ஏமாற்றி, பணம் பறித்ததாக ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகையின் சில ஆடியோக்களையும் வெளியிட்டுள்ளார், ஆடியோவில் இருப்பது என்ன?

 • Share this:


  சென்னையைச் சேர்ந்தவர் அந்த 24 வயது நடிகை; இவர் தமிழில் பல சின்னத்திரை தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தனது முன்னாள் காதலன் 29 வயதான ராஜேஷ் என்பவர் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், 2020ம் ஆண்டு ஜனவரியில் புகாரளித்திருந்தார் அதில், ராஜேஷ் உடன் தனக்கு 2019 ம் ஆண்டு டிசம்பரில் நிச்சயதார்த்தம் ஆனதாக குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து ராஜேஷ் தன்னை மூளைச் சலவை செய்து தன்னுடன் தனிமையில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

  ராஜேஷ் திருமணம் செய்யாமல் விலகிவிட்டதாகவும், தன்னிடம் இருந்து இரண்டரை லட்சம் ரூபாய் பறித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

  நடிகையின் புகார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிடவே, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில் தன் மீதான நடிகையின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் ராஜேஷ்.

  தனக்கும் நடிகைக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது உண்மை எனத் தெரிவித்துள்ள ராஜேஷ், நடிகையின் நடவடிக்கைகள் சரியில்லாததால் தான் போலீசில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதமே நடிகை மீது புகாரளித்ததாகவும் கூறியுள்ளார். நடிகையின் நடவடிக்கைகள் குறித்து அவரது வாட்ஸ் ஆப்பில் பதிவான பல உரையாடல்களை போலீசாரிடம் ஆதாரங்களாகக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  மேலும் தன்னிடம் இருந்து நடிகை தான் பணம் பறித்துக் கொண்டு திருப்பித் தராமல் ஏமாற்றியதாகவும் ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான போலீசார் விசாரணையில் நடிகையே தனது தவறுகளை ஒப்புக் கொண்டதாகவும் ராஜேஷ் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

  தன் மீதான நடிகையின் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக புகாருக்குள்ளான ராஜேஷ் தரப்பு தெரிவித்துள்ளது. இளைஞர் மீதான நடிகையின் புகாரும், அதற்கு இளைஞரின் எதிர்வினையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: