Home /News /entertainment /

அஜித்தின் 'AK 61' படத்தில் இணைந்த பிரபல நடிகர்...

அஜித்தின் 'AK 61' படத்தில் இணைந்த பிரபல நடிகர்...

அஜித் - AK 61

அஜித் - AK 61

AK 61 Update | வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகும் 'ஏகே 61' படத்தில் அஜித் ஹீரோ - வில்லன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

    ஹெச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணியானது 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' படங்களின் வெற்றிக்கு பிறகு அஜித்தின் 'ஏகே 61' படத்தில் இணைந்துள்ளது. மேலும் படத்தின் ஷுட்டிங் பணிகலானது கடந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது இப்படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ஹீரோ - வில்லன் என அஜித், இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், அதில் ஒன்று வயதான காலேஜ் ப்ரொஃபசர் ரோலிலும், மற்றொன்று செம ஸ்மார்ட் மற்றும் ஸ்லிம் ஃபிட்டான இளமை தோற்றத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக சில கிலோ எடையை நடிகர் அஜித் குறைத்துள்ளார்.

    'ஏகே 61' படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் பிரமாண்டமான 'மவுண்ட் ரோடு' செட் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகள் இந்த செட்டில் தான் படமாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே 'ஏகே 61' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மஞ்சு வாரியர் மற்றும் ஜான் கோக்கனும் நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தற்போது 'ராஜதந்திரம்' நடிகர் வீராவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ராஜதந்திரம், நடுநிசி நாய்கள் உள்ளிட்ட படங்களில் வீரா நடித்துள்ளார். த்ரில்லர் படமான 'ராஜதந்திரம்' திரைப்படத்தில் அவரின் முக்கிய பாத்திரத்திற்காக நன்கு அறியப்பட்டவர் வீரா. இந்தப் படமும் கொள்ளையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
    மேலும் அவரது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மனதில் தனக்கான இடத்தையும் பிடித்துள்ளார். டைரக்டர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக பல படங்களில் வீரா பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Also Read : தோனி படத்தில் நயன்தாரா... உற்சாகத்தில் ரசிகர்கள்!

    இப்படத்தில் ஹீரோ - வில்லன் கதாப்பாத்திரத்தில் அஜித்தே நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் ஜான் கொக்கன்னை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்தில் இடம்பெறும் வில்லன்களில் ஒருவராக அவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'ஏகே 61' திரைப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    Published by:Selvi M
    First published:

    Tags: Actor Ajith, Entertainment

    அடுத்த செய்தி