Home /News /entertainment /

ஜெய்பூரில் கோலாகலமாக நடைபெற உள்ள பிரமாண்ட இயக்குநர் வீட்டுத் திருமணம்!

ஜெய்பூரில் கோலாகலமாக நடைபெற உள்ள பிரமாண்ட இயக்குநர் வீட்டுத் திருமணம்!

திருமண வீட்டாருடன் இணைந்து நடிகர்கள் ராம் சரண், பிரபாஸ், ரானா ஆகியோர் விருந்தினர்களை ஆடிப்பாடி மகிழ்வித்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
தெலுங்கு பட உலகில் மட்டுமல்லாது ‘பாகுபலி’ மூலம் சர்வதேச அளவில் பிரமாண்ட இயக்குநராகப் பாராட்டுகள் பெற்ற இயக்குநர் ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா திருமணம் நாளை ஜெய்பூரில் நடைபெறுகிறது.

ராஜமெளலி- ரமா தம்பதியரிம் மகன் கார்த்திகேயாவுக்கும் பூஜா பிரசாத் என்பவருக்கும் நாளை ஜெய்பூரில் பிரம்மாண்டமாகத் திருமணம் நடைபெறுகிறது.

ஜெய்பூரில் உள்ள ஐந்து நட்சத்திட ஹோட்டல் ஃபேர் மெளன்ட்-ல் திருமணம் நடைபெறுவதால் தெலுங்கு நட்சத்திரங்கள் உள்ளிட்ட சில பாலிவுட் பிரபலங்களும் ஒரு நாள் முன்னதாகவே ஜெய்பூர் வந்து சேர்ந்துள்ளனர்.

கார்த்திகேயா தனது நீண்ட நாள் காதலியான பூஜா பிராசாத்தைத் திருமணம் செய்து கொள்கிறார். பூஜா பிரசாத் தென்னிந்தியாவின் முன்னணிப் பாடகியாக உள்ளார். கார்த்திகேயே- பூஜாவின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த நவம்பர் மாதம் நிகழ்ந்தது.

மணமக்களுக்கு முன்னதாகவே திருமண வீட்டாருடன் இணைந்து நடிகர்கள் ராம் சரண், பிரபாஸ், ரானா ஆகியோர் விருந்தினர்களை ஆடிப்பாடி மகிழ்வித்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: வீட்டைச் சூறையாடிய கந்துவட்டி கும்பல்!
Published by:Rahini M
First published:

Tags: Rajamouli

அடுத்த செய்தி