தேதி குறிப்பிடாமல் ஆர்ஆர்ஆர் பட வெளியீட்டை தள்ளி வைத்த ராஜமௌலி..

காட்சி பட,ம்

பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப் போயுள்ளது.

 • Share this:
  ராஜமௌலி திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்திருந்தால் இந்த வருட ஆரம்பத்தில், அதாவது ஜனவரி மாதம் ஆர்ஆர்ஆர் படம் வெளியாகியிருக்க வேண்டும். கொரோனா முதல் அலையால் படப்பிடிப்பு தடைபட,,படவெளியீட்டை இந்த வருட அக்டோபர் மாதத்துக்கு மாற்றினர். எதிர்பாராதவிதமாகொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு மேலும் தாமமானது. எனினும் அக்டோபரில் படத்தை வெளியிடும் திட்டத்துடன் படப்பிடிப்பை வேகமாக முடித்தனர். 

  இந்நிலையில், அக்டோபரில் படம் வெளியாகாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையும்கட்டத்தில் உள்ளது. அக்டோபர் 21 அனைத்துப் பணிகளும் முடியும். எனினும் திட்டவட்டமாக  ஒரு வெளியீட்டு தேதியை கூற முடியவில்லை.

  திரையரங்குகள் முழுமையாக திறந்து உலக சினிமா வர்த்தகம் சகஜநிலைக்கு திரும்புகையில், எத்தனை முன்னதாக வெளியிட முடியுமோ அத்தனை முன்னதாக படத்தை வெளியிடுவோம் என அறிவித்துள்ளனர்.  Also Read : பூஜையுடன் தொடங்கிய ஜெயம் ரவி 28 - புகைப்படங்கள்

  ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடிப்பில் பாகுபலி போலவே ஆர்ஆர்ஆர் படமும் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் உலக அளவில் முழுமையாக இயங்க ஆரம்பித்தபின் படத்தை வெளியிட்டால் மட்டுமே இந்தப் படத்தால் பாகுபலி வசூலை முறியடிக்க முடியும். அந்த திருநாள் எந்நாளோ... அதுவரை ரசிகர்கள் பொறுத்துத்தான் ஆக வேண்டும் என்பதை நேரடியாகவே இன்று அறிவித்துள்ளனர்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: