விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களில் ஒன்று தான் ராஜா ராணி. மேலும் அந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை ஆல்யா மானசா. இவர் 17 வயதில் மாடலாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கினார். அதேபோல இவர் ஆர்.ஜேவாகவும் பணிபுரிந்துள்ளார். நடனம் ஆடுவதில் சிறந்து விளங்கும் இவர் ஒரு நடன பயிற்றுவிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். அவ்வபோது இவர் வெளியிடும் டான்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி நல்ல வரவேற்பை பெறும்.
ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பாகவே ஆல்யா மானசா கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவருடன் ஜோடியாக ஆடிய மானஸ் என்பவரை ஆல்யா மானஸா காதலித்து வந்தார். ராஜா ராணி சீரியலில் நடிக்க தொடங்கி சில மாதங்களில் இவர்களது காதல் முறிவடைந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்து வந்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐலா என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. கர்ப்பமாக இருந்த காலத்தில் சீரியலில் நடிப்பதிலிருந்து விலகியிருந்த ஆல்யா. குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது இவர் ராஜா ராணி-2 சீரியலில் நடித்து வருகிறார். முதல் சீசனில் கிடைத்த அதே வரவேற்பும், ஆதரவும் 2-ம் சீசனுக்கும் கிடைத்தது. இந்த தொடரில் சிந்துவுக்கு ஜோடியாக ஆல்யா நடிக்கிறார்.
இந்நிலையில் ராஜா ராணி 2 சீரியலில் நடிப்பதற்காக ஆல்யா மானசா ஒரு நாளைக்கு ரூ. 13,000 சம்பளமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது. அதேபோல, நடிகர் சித்துவுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.10,000 என்றும் கூறப்படுகிறது. பிற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு அதைவிட குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது.
தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சென்னையில் நடக்கும் சமையல் போட்டிக்காக சரவணன் மற்றும் சந்தியா இருவரும் செல்கின்றனர். இந்த நிலையில், இந்த வார எபிசோட்டிற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதில் இருவரும் ஒரு கடையில் ஜூஸ் குடித்து கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் அந்த வழியாக வரும் ஒரு கார் அங்கு இருந்த குழந்தையின் மீது மோதி விட்டு சென்று விடுகிறது. உடனே சரவணன் குழந்தையை மீட்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் சந்தியா மருத்துவமனைக்கு செல்லாமல் இடித்து விட்டு சென்ற காரை தேடி வேறு ஒரு ஆட்டோவில் புறப்படுகிறார்.
அந்தக் கார் சென்ற இடத்தை கண்டு பிடித்த சந்தியா உடனே சரவணனுக்கு ஃபோன் செய்து போலீஸ் உடன் வருமாறு கூறுகிறார். அதேசமயம் தானும் அந்த வீட்டில் நுழைகிறார். வீட்டில் இருந்து வரும் ரவுடிகள் சந்தியாவை தாக்கத் தொடங்கும் நேரத்தில் சரவணனை போலீசுடன் வருகிறார். போலீசும் ரவுடிகளை கைது செய்கின்றனர். சந்தியாவின் வீர தீர செயலை பாராட்டிய கமிஷனர், நீங்கள் போலீசில் இருக்க வேண்டிய ஆள், எப்பொழுது வேலையில் ஜாயின் பண்ணுகிறீர்கள் என்று கேட்கிறார். இதனால் மகிழ்ச்சி அடையும் சந்தியா, காக்கி சட்டையுடன் ரவுடிகளை துவம்சம் செய்வது போன்ற காட்சியுடன் ப்ரோமோ முடிகிறது.
Published by:Karthick S
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.