இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடினார். தன் கடின உழைப்பால் தமிழ்த் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ள தளபதி விஜய்யின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஏழை மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். நடிகர் விஜய்க்கு வெகுஜன மக்கள் மட்டுமின்றி அவரது துறையில் உள்ள சக நடிகர், நடிகைகள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் என ஏராளமான பிரபலங்கள் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
ஜூன் 22 நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் முதல் பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் என ஏராளமானோர் அவருக்குத் தங்களுடைய சோஷியல் மீடியா மூலம் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் கோலமாவு கோகிலா திரைப்பட புகழ் டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பெயரும் (பீஸ்ட்), ஃபர்ஸ்ட் லுக்கும் ரிலீஸ் செய்யப்பட்டு விஜய்யின் பிறந்த நாளையொட்டி வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது.
Also Read:
வாட்ஸ் அப்பில் ஜியோ மார்ட்: இ-காமர்ஸ் வணிகத்தின் புதிய பரிணாமம் - முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்!
இதனை தொடர்ந்து ரசிகர்கள் பீஸ்ட் போஸ்டரில் ஸ்டைலிஷ் மற்றும் அட்டகாசமான லுக்கில் விஜய் காட்சியளித்த போட்டோவை ஹேஷ்டேக் மூலம் ட்ரெண்ட் செய்து கொண்டாடி மகிழ்ந்தார்கள். இதனால் தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' ஃபர்ஸ்ட் லுக் 24 மணி நேரத்தில் இந்தியாவின் மிகவும் விரும்பப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக மாறியது. விஜய்க்கான பிறந்த நாள் வாழ்த்து போஸ்ட்டில் , நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் மாளவிகா மோகனன் இருவரது போஸ்ட்களும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. 'ஆல்தோட்ட பூபதி' பாடலுக்கு பவன் அலெக்ஸ் என்ற டான்ஸ் மாஸ்டருடன் இணைந்து நடனமாடி வாழ்த்து தெரிவித்தார் கீர்த்தி சுரேஷ். நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் கெட்டப்பில் இன்ஸ்டா ரீல்ஸில் வீடியோ வெளியிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
இப்படி வெள்ளித்திரை நட்சத்திரங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் சின்னத்திரையில் நடிகர் மற்றும் விஜேவாக உள்ள பிரதோஷ், நடிகர் விஜய்க்கு அவரது ஸ்டைலிலேயே நடனமாடி வாழ்த்து தெரிவித்துள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2-வில் நடிகை ஆல்யா மானசாவிற்கு கொழுந்தன் கேரக்டரில் நடித்து வரும் விஜே பிரதோஷ், தனது இன்ஸ்டா பக்கத்தில் "நம்ம தளபதிக்கு நான் கொடுக்கும் கிஃப்ட்" என்று கூறி மாஸ்டர் ஆடியோ லான்ச் விழாவில் நடிகர் விஜய் டான்ஸ் பிளாக் டிரெஸ்ஸில் ஆடியது போலவே வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜே பிரதோஷ் அப்படியே விஜயை போன்றே பிளாக் டிரஸ் மற்றும் டான்ஸ் ஸ்டெப்களை போட்டு அசத்தி உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விஜே பிரதோஷின் இந்த வீடியோ விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.