ராஜா ராணி 2 சீரியலில் அடுத்தக்கட்ட விறுவிறுப்பு -புதிய பிளானிற்கு தயாராகும் அர்ச்சனா

ராஜா ராணி 2

விறுவிறுப்பாக செல்லும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனாவின் புதிய பிளான் இதுதான்..

  • Share this:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ரசிகர்களை கவர்ந்த ஒன்று ராஜா ராணி 2 சீரியல். இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஏராளமான ட்விஸ்ட்டுகள் மற்றும் சுவாரஸ்யங்கள் தொடர்ச்சியாக காட்டப்பட்டு வருவதால் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ராஜா ராணி சீசன் 1-ல் செம்பாவாக நடித்து ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள நடிகை ஆல்யா மானசா இந்த சீரியலில் சந்தியா என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவரின் கணவராக சரவணன் என்ற கேரக்டரில் நடிகர் சித்து நடித்து வருகிறார். படிக்காத பெண் என்ற ரூபத்தில் சிவகாமி குடும்பத்தில் மருமகளாக நுழையும் சந்தியாவின் முழு விருப்பமும் ஒரு சிறந்த ஐபிஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்பதாக இருந்தது. எனினும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சரவணனின் மனைவியாக மாமியார் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் சந்தியா படித்த பெண் என்பது புகுந்த வீட்டிற்கு தெரிய வர அதனால் சில சிக்கல்கள் எழுகிறது.

யார் என்ன சொன்னாலும் மனைவியை எந்த இடத்திலும் விட்டு கொடுக்காத கணவனாக இருந்து வருகிறார் சரவணன். சந்தியா சிறந்த மருமகள் என்பதை நிரூபிக்க சிவகாமி 3 மாதம் அவகாசம் கொடுத்த நிலையில், சரவணனின் தம்பி செந்தில் மற்றும் அர்ச்சனா ஆகியோர் விலை உயர்ந்த நகை ஒன்றை எடுத்து வைத்து கொண்டு பழியை சந்தியா மீது போட்டு விட்டனர். பின்னர் வீடியோ ஆதாரத்தை குடும்பத்தினரிடம் காண்பித்து சந்தியா நகையை திருடவில்லை. நகை அர்ச்சனாவிடம் தான் உள்ளது என்பதை நிரூபிக்கிறார் சரவணன்.

Also Read: சீரியல் பிரியர்களை மகிழ்விக்க வருகிறது ’தமிழும் சரஸ்வதியும்’-ஜூலை 12 முதல் விஜய் டிவியில் புதிய சீரியல்

சந்தியாவை பிடிக்காதவர்கள் என்ற பட்டியலில் இருக்கும் இரு பெண்களாக இருக்கின்றனர் சரவணனின் தம்பி மனைவி அர்ச்சனாவும். தங்கை பார்வதியும். இவர்கள் இருவருக்குள்ளும் ஒரு டீலிங் ஓடி கொண்டிருக்கிறது, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது தங்கையை பெண் பார்க்க மாப்பிளை வீட்டாரை வர வைத்து, மாமியார் வீட்டை தங்களது வீடு போல காட்டுகிறார் அர்ச்சனா. ஆனால் மாப்பிள்ளையாக வந்த பாஸ்கர் விரும்புவதோ பார்வதியை. அது பார்வதியின் வீடு என்பது தெரிந்தே தான் பாஸ்கர் பெண் பார்க்க வந்திருப்பான்.

இந்த விஷயம் புரியாமல் முழிக்கும் பார்வதிக்கு, ஒரு கட்டத்தில் தன் அண்ணி அர்ச்சனா செய்துள்ள தில்லுமுல்லு வேலை தெரிந்து விடுகிறது. அர்ச்சனா கெஞ்சி கேட்பதால் இந்த விஷயத்தை வீட்டில் உள்ள யாரிடமும் கூறாமல் தவிர்த்து வருகிறார். ஆனால் நாளுக்கு நாள் பார்வதியை தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்து வருகிறான் பாஸ்கர். இதை சொல்லி அர்ச்சனாவிடம் புலம்பு பார்வதி, உங்கள் தங்கையை பெண் பார்க்க இந்த வீட்டிற்கு வர சொன்ன திருட்டு வேலையால் எனக்கு தான் பிரச்னை அதிகமாகி உள்ளது.]

Also Read: ஜாமீனில் வந்த ’மாயன்’ - விறுவிறுப்பாக செல்லும் ’நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல்!

பார்க்கும் இடத்தில் எல்லாம் பாஸ்கர் என்னை தினமும் டார்ச்சர் செய்கிறான். வீட்டிற்கு அடிக்கடி போன் செய்கிறான். அவன் ஒருநாள் போக்கே கொடுத்து வாங்குமாறு கட்டாயப்படுத்தியதால் அவனிடமிருந்து தப்பிக்க வேறு வழியின்றி வாங்கினேன். அதை அம்மா பார்த்து பெரிய பிரச்சனையானது இன்னும் ஓயவில்லை.நீங்க இந்த பாஸ்கர் பிரச்சனைக்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்ட வேண்டும். இல்லை என்றால் உங்கள் வீடு என்று இந்த வீட்டை பொய் சொல்லி உங்கள் தங்கையை பெண் பார்க்க வைத்த விஷயத்தை அம்மா உட்பட வீட்டிலிருக்கும் எல்லோரிடமும் சொல்லி விடுவேன், பார்த்துக்கோங்க என்று கோபமாக கூறுகிறாள்.

இதனால் அதிர்ச்சி அடையும் அர்ச்சனா, இல்லை பார்வதி இனிமேல் இந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன். இனிமே பாஸ்கர் உனக்கு போன் பண்ண மாட்டான் என்று கூறுகிறாள்.
கூடவே இந்த பிரச்சனையை காதும் காதும் வைத்த மாதிரி முடிக்கவும், பிரச்னை தெரிந்து மாமியார் சிவகாமி தன்னை வீட்டை விட்டு துரத்தாமல் இருக்கவும் வேறு ஒரு புது பிளானிற்கு உதவுமாறும் பார்வதியிடம் கோரிக்கை வைக்கிறாள் அர்ச்சனா. ஆனால் செய்யாத தவறுக்கே உங்களால் நான் சீரிழிவது பத்தாதா.! இதுல புது பிளான் வேறயா. என்னால் எதுவும் செய்ய முடியாது என்று மறுக்கிறாள் பார்வதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனினும் விடாப்பிடியாக இருக்கும் அர்ச்சனா பாஸ்கர் பிரச்சனையை முடிக்க, புதிய பிளானை நேயர்களுக்கு காட்டாமல் பார்வதியிடம், அர்ச்சனா சொல்லும் படி ஒளிபரப்பப்பட்டது. பிளானை முழுவதும் கேட்கும் பார்வதி சரி செய்கிறேன் ஆனால் இதன் போக்கு பாஸ்கரால் எனக்கு எந்த தொந்தரவும் வர கூடாது என்று கூறுகிறாள். அதற்கு தான் பொறுப்பு என்று சொல்கிறாள் அர்ச்சனா. தன் தங்கையை பெண் பார்க்க மாமியார் வீட்டை தன் வீடாக பயன்படுத்திய அர்ச்சனாவின் குட்டு வெளிப்படுமா.? அல்லது இந்த விவகாரம் வெளியே வரமலேயே பார்வதிக்கு பாஸ்கர் கொடுக்கும் லவ் டார்ச்சர் நிற்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Published by:Tamilmalar Natarajan
First published: