ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மிகவும் பிரபலமானது. ஆல்யா மனசா மற்றும் சஞ்சீவ் ஆகியோர் செம்பா, கார்த்திக் என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இத்தொடர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றதை அடுத்து இத்தொடரின் இரண்டாவது பாகம் உருவானது.
திருமணம் தொடர் சித்து நாயகனாகவும், ஆல்யா மானஷா நாயகியாகவும் நடித்து வரும் இத்தொடர் 2020 -ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் வரும் வாரம் அதிரடி திருப்பங்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விஜய் டிவி வெளியிட்டிருக்கும் ப்ரமோவில், அர்ச்சனா அமுதன் வியாபாரத்துக்கு வைத்திருந்த சேலைகள் எரிந்து நாசமானதாக பொய் சொல்லி நாடகமாடியிருப்பது தெரிய வருகிறது. அர்ச்சனாவை கையும் களவுமாக பிடித்திருக்கிறார் சந்தியா (ஆல்யா மானஷா) மேலும் இந்த உண்மை அமுதனின் தாயார் லக்ஷ்மி ராஜசேகருக்கும் தெரிய வந்திருப்பதோடு சந்தியா சந்திக்கப் போகும் சவால்கள் என்ன என்ற கோணத்தில் கதை நகர்கிறது.
ராஜா ராணி 2-வின் கதை:
சந்தியா (ஆல்யா மானஷா) தனக்கென ஒரு இலட்சியத்தை வளர்த்துக்கொண்டு அதை சாதிக்க வேண்டும் என்ற உறுதியுடன் வாழ்கிறார். மேலும் ஐ.பி.எஸ். அதிகாரியாக வேண்டும் என்றும் எண்ணுகிறார் . சரவணன் நல்ல உள்ளம் கொண்ட அதிகம் படிக்காத இளைஞர் . சந்தியா குடும்ப சூழல் காரணமாக சக்தியை திருமணம் செய்ய நேர்கிறது. சக்தி குடும்பத்துடன் இணைந்து இனிப்பு வியாபாரம் செய்து வருகிறார். சரவணனின் தாய் தனது மருமகள் அதிகம் படித்திருக்க தேவை இல்லை குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொண்டாள் போதும் என்ற முடிவுடன் இருக்கிறார்.
சந்தியா நன்கு படித்தவர் என்பதை அவரிடம் இருந்து மறைத்து சரவணனிற்கும் சந்தியாவிற்கு திருமணம் நடைபெறுகிறது. சந்தியாவின் கனவு என்னவானது. அவர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆக முடிகிறதா அவர் வாழ்வில் என்னென்ன நிலைகளை எதிர்கொள்கிறார் சரவணன். சந்தியாவுக்கு உறுதுணையாக இருக்கிறாரா என்பதே இத்தொடரின் கதை.
பிரவீன் பென்னட் இயக்கும் இத்தொடரில் ஆல்யா மனசா, சித்து, பிரவீனா, ரவி, அர்ச்சனா மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
Published by:Sheik Hanifah
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.