Home /News /entertainment /

ராஜா ராணி 2 பார்வதிக்கு கல்யாணம் முடிந்தது! ஆனா.. ஹிந்தியில் நடந்தது தமிழிலும் நடக்குமா?

ராஜா ராணி 2 பார்வதிக்கு கல்யாணம் முடிந்தது! ஆனா.. ஹிந்தியில் நடந்தது தமிழிலும் நடக்குமா?

ராஜா ராணி 2 குழு

ராஜா ராணி 2 குழு

Raja Rani 2 Serial: கதையின்படி பார்வதியின் கணவர் இறந்து விடுவார். அப்படித்தான் ஹிந்தி சீரியலிலும் நடந்தது ராஜா ராணி 2 ஆனது, ஹிந்தி சீரியலின் தமிழ் வெர்ஷன், அதற்காக கதையில் கொஞ்சம் கூட மாற்றங்கள் செய்யாமல் இருப்பார்களா?

ஒரு கூட்டு குடும்பம், அதில் 1008 பிரச்னைகள், ஒரு பிரச்னை முடிந்த கையோடு அடுத்த பிரச்னை கிளம்பும். இந்த 'பேஸிக்' கான்செப்ட்டை வைத்துக்கொண்டு அரைத்த மாவையே அரைத்து மொக்கை வாங்கிய சீரியல்களும் உள்ளன. அதேசமயம் கதையை சொல்லும் விதத்தில், திரைக்கதையை கொண்டு போகும் பாணியில் சுவாரஸ்யம் காட்டி சூப்பர்ஹிட் ஆன சீரியல்கள் பல உள்ளன. அப்படியாக பெரிய அளவில் வெற்றி பெற்ற ஒரு சீரியல் தான் '​தியா அவுர் பாத்தி ஹம்' என்கிற ஹிந்தி தொடர்.

​தியா அவுர் பாத்தி ஹம் சீரியல், ஒரு பெண்ணின் லட்சியத்தை பற்றியது. படிப்பில் நம்பர் 1 ஆக திகழும் ஒரு பெண்ணை, ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்கிற லட்சியத்தினை கொண்ட ஒரு பெண்ணை, சுமாராக படித்து ஒரு ஸ்வீட் கடை வைத்து நடத்தும் ஒருவருக்கு திருணம் செய்து வைத்து விடுகிறார்கள் - நிறுத்துங்க.. நிறுத்துங்க..! இந்த கதையை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே..?! அட இது நம்ம ராஜா ராணி 2 சீரியலின் கதை தானே?

ஆம்! ஹிந்தியில் சூப்பர்ஹிட் ஆன ​தியா அவுர் பாத்தி ஹம் என்கிற சீரியலின் தமிழ் வெர்ஷன் தான் ராஜா ராணி 2. இது பலருக்கும் தெரிந்து இருக்கலாம்; சிலருக்கு தெரியாமல் போய் இருக்கலாம். அதனால் தான் இங்கே குறிப்பிட வேண்டியதாகி விட்டது. ஏனெனில் ராஜா ராணி 2 சீரியலில் சரவணனின் தங்கையான பார்வதிக்கு இனிதே திருமணம் நடந்து முடியும் காட்கிகள் ஷூட் செய்யப்பட்டுள்ளது போல் தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக ஊடங்களில் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு புகைப்படத்தில், ராஜா ராணி 2 சீரியலில், பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கும் வைஷூ சுந்தர் மணப்பெண் கோலத்தில் நிற்கிறார், அவருடன் சீரியலில் நடிக்கும் சக நடிகர், நடிகைகளும் போஸ் கொடுத்துள்ளனர். இதை பார்க்கும் போது பார்வதிக்கு நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்து விட்டது என்பதை அறிய முடிகிறது. ராஜா ராணி 2 சீரியலின் ரசிகர்கள் குறிப்பிட்ட போஸ்ட்டிற்கு லைக்ஸ்களை வாரி வழங்கியபடி உள்ள நிலையில் ஒரு ரசிகர் திடுக்கிடும் கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த ரசிகர், "கதையின்படி பார்வதியின் கணவர் இறந்து விடுவார். அப்படித்தான் ஹிந்தி சீரியலிலும் நடந்தது என்று நினைக்கிறேன்" என்று கமெண்ட் செய்து உள்ளார். ராஜா ராணி 2 ஆனது, ஹிந்தி சீரியலின் தமிழ் வெர்ஷன், அதற்காக கதையில் கொஞ்சம் கூட மாற்றங்கள் செய்யாமல் இருப்பார்களா? என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Read More : உண்மையை கண்டுப்பிடித்த சந்திரகலா.. மிகப் பெரிய அதிர்ச்சியில் தமிழ் - சரஸ்வதி!

இது ஒருபக்கம் இப்படி இருக்க, சந்தியா கதாபாத்திரத்தில் நடித்த ஆல்யா மானசா மகப்பேறு காரணமாக சீரியலில் இருந்து விலகி உள்ளார் என்பதும் அவருக்கு பதிலாக ரியா விஸ்வநாத் சந்தியா கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

 
Published by:Elakiya J
First published:

Tags: TV Serial, Vijay tv

அடுத்த செய்தி