Home » News » Entertainment » RAGHAVA RAWRENCE APOLOGIES TO RAJINIKANTH FANS SKD

அரசியல் வருகை குறித்த ரஜினி முடிவு - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராகவா லாரன்ஸ்

ரஜினியின் அரசியலுக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ளநிலையில் அவரது ரசிகர்களிடம் ராகவா லாரன்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அரசியல் வருகை குறித்த ரஜினி முடிவு - ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராகவா லாரன்ஸ்
ரஜினிகாந்த் உடன் ராகவா லாரன்ஸ்
  • Share this:
ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக கேள்வி இருந்துவந்துள்ள நிலையில், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று இந்த விவகாரத்துக்கு சமீபத்தில் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும், ரஜினிகாந்தின் முடிவால் அதிருப்தியடைந்த அவருடைய ரசிகர்கள் ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ராகவா லாரன்ஸ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் என்னை கலந்துகொள்ளச் சொல்லி பலரும் கேட்டுக்கொண்டனர். இயக்குநர் சாம்ரமணி மூலமாக பல குரல்களை நான் கேட்டேன்.

இப்போதும் ரஜினிகாந்தின் முடிவை மாற்றக் கோரி என்னிடம் பலர் கோரிக்கைவிடுத்துவருகின்றனர். அதனால், தான் நான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். ரஜினியின் முடிவால் உங்களுக்கு எவ்வளவு வலி உள்ளதோ அதே அளவுக்கு வலி எனக்கும் உள்ளது. ரஜினிகாந்த் வேறு ஏதேனும் காரணம் கூறியிருந்தால் நாம் அவரிடம் வேண்டுகோள் விடுக்கலாம். ஆனால், அவருடைய உடல்நிலையை முக்கிய காரணமாக கூறியுள்ளார்.

நாம் அவருடைய முடிவை மாற்றக் கூறி வலியுறுத்துவதைக் கேட்டு அவர் முடிவை மாற்றி அதனால் அவருக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் நாம் அந்த குற்றவுணர்வுடன் வாழ்நாள் முழுவதும் வாழ முடியாது. அவர் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் அவர்தான் என்னுடைய குரு. எனக்கு அவருடயை உடல்நிலை குறித்து தெரியும்.


நான் அவரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன். அவருடைய உடல்நிலை குறித்தும் அவருடைய ஆரோக்கியத்துக்காவும் நாம் தொடர்ந்து பிரார்த்தனை செய்வதுதான் நம்முடைய வேலை’ என்று குறிப்பிட்டுள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
First published: January 12, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading