ராகவா லாரன்ஸ் - ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ருத்ரன்’ படப்பிடிப்பு தொடக்கம்

ருத்ரன் படக்குழு

ராகவா லாரன்ஸ் - ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ருத்ரன்’ படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

  • Share this:
ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகும் படம் ருத்ரன். இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கே.பி.திருமாறன் கதை திரைக்கதையில் உருவாகும் ‘ருத்ரன்’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கும் இத்திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காஞ்சனா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிப்பில் காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற டைட்டிலில் ரீமேக் செய்தார் ராகவா லாரன்ஸ். சமீபத்தில் இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் சன் டிவி தயாரிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் ஒப்பந்தமான ராகவா லாரன்ஸ், ‘ருத்ரன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: விஜய்யுடன் ஹேட்ரிக் அடிக்கும் பூவையார்... தளபதி 65-லும் நடிக்கிறாரா?

அதேபோல் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ப்ரியா பவானி சங்கர், அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’, எஸ்.ஜே.சூர்யாவுடன் ‘பொம்மை’, ஹரிஷ் கல்யாணின் ஓ மணப்பெண்ணே, சிம்புவுடன் ‘பத்து தல’, ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் என ஏராளமான படங்களை கையில் வைத்திருக்கிறார்.
Published by:Sheik Hanifah
First published: