நடிகர் ராகவா லாரன்ஸ்-க்கு அன்னை தெரசா விருது

news18
Updated: September 14, 2018, 8:43 PM IST
நடிகர் ராகவா லாரன்ஸ்-க்கு அன்னை தெரசா விருது
நடிகர் ராகவா லாரன்ஸ்
news18
Updated: September 14, 2018, 8:43 PM IST
அன்னை தெரசாவின் பிறந்தநாளையொட்டி சிறந்த சமூக சேவைக்கான விருது நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.

அன்னை தெரசாவின் 108-வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை காமராஜர் அரங்கத்தில் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மதர் தெரசா சாரிட்டபிள் டிரெஸ்ட் சார்பில் நடந்த இந்த விழாவுக்கு அதன் நிறுவனர் ஜி.கே.தாஸ் தலைமை தாங்கினார். இந்த விழாவில் மிகச் சிறந்த சமூக சேவைக்கான விருது நடிகர் ராகவா லாரன்ஸ்க்கு வழங்கப்பட்டது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வழங்கினார்கள்.

விருதை பெற்றுக்கொண்ட லாரன்ஸ் இந்த விருதை தனது அம்மாவுக்கு காணிக்கையாக்குவதாக தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ``இந்த உலகத்தில் முதல் கடவுளாக நான் என் தாயைத் தான் நினைக்கிறேன். என்னுடைய 10 வயதில் பிரெயின் ட்யூமர் நோய் எனக்கு வந்தது. அப்போது என்னை ராயபுரத்திலிருந்து ஸ்டாலின் மருத்துவமனைக்கு தோளில் தூக்கி சென்று என்னை நம்பிக்கையோடு காப்பாற்றவில்லையென்றால் இன்று நான் இல்லை.

முதலில் சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் எனக்கு கார் துடைக்கும் வேலை கொடுத்தார். அங்கு என்னை பார்த்த சூப்பர் ஸ்டார் எனக்கு கடிதம் கொடுத்து டான்ஸ் மாஸ்டராக உதவி செய்தார். அமர்க்களம் படத்தில் நடிகராகி இன்று இயக்குநராக தயாரிப்பாளராக நான் உயர்ந்ததற்கு எத்தனையோ பேர் உதவி இருக்கிறார்கள். குறிப்பாக சூப்பர் சுப்பராயன், ரஜினி, அஜித், விஜய், சிரஞ்சீவி, இயக்குநர் சரண், நாகர்ஜூனா எனக்கு உதவியர்கள் பெயரை சொன்னால் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். மக்கள் திலகத்தின் ‘தர்மம் தலைகாக்கும்’, பாடலையும், ‘மரத்தை வைச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்ற ரஜினி சார் பாடலையும் மனதில் வைத்துக் கொண்டு உதவி செய்து வருகிறேன். தொடர்ந்து அன்னை தெரசா வழியில் செயல்படுவேன்” என்று கூறினார்
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்